2022ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புப்படுத்தி பிபிசி சார்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி 2 பகுதிகளாக ஆவணப்படங்களை தயாரித்துள்ளது. இதில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாஜகவில் செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பிபிசி ஆவணப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
நீங்கள் உண்மையை பேச துணிவில்லாமல் இருந்தால் பொய்யையும், நாடகத்தையும் நம்பியிருப்பதாக அர்த்தம். இவை இரண்டின் கலவையாக தான் நமது பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம். நாட்டை வழிநடத்த என்ன செய்ய வேண்டும் என்பதை உலகுக்கு காட்டிய அவரை உலகமே பாராட்டி வருகிறது. கோத்ரா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் க்ளீன்சீட் வழங்கி இருக்கும்போது பிபிசி இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு என்ன காரணம்?. பிரதமர் மோடியை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் இது செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூட இந்த ஆவணப்படத்தை ஏற்கவில்லைஎன தெரிவித்துள்ளார். உலகின் மற்ற தலைவர்களக்கும், கற்றறிந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆவணப்படத்தின் பொய்களையும், பிரதமரை இழிவுப்படுத்துவதன் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள எதிர்க்கட்சிகள் அற்ப இன்பம் பெறுவதை பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த நாட்டின் தலைவராக உள்ளார். அவரது தலைமையில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் கொண்ட வந்த ஒவ்வொரு திட்டமும், கொள்கையும் இந்தியர்களுக்கானது. ஒவ்வொரு இந்தியனும் மதத்துக்கு அப்பாற்பட்டு பாஜகவின் கீழ் எந்த வேறுபாடும் இன்றி நன்றாக நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் பலம் என்பது சிலரை உறுத்துகிறது. ஆனால் அவர்கள் முடிந்தவரை முயற்சி செய்யப்பட்டும். பிரதமரையும், அவரது தலைமையையும் நம்பும் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் அசைக்கவே முடியாது. மோடி தொடர்ந்து இந்தியாவை வழிநடத்துவார். அவரது தலைமையில் இந்தியா உள்கட்டமைப்பு, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சிறந்த தேசம் என்பதை உலக நாடுகள் பார்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.