பட்ஜெட்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு!

5வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது.

இந்நிலையில், மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அரசு துறை, தனியார் துறை, விவசாயிகள் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என நிதி மந்திரி கூறி உள்ளார்.

63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு. புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்படும். வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளத்துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு. சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும். 2047-ம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கர்நாடகாவில் வறட்சி நிலவும் பகுதியில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள். மூலதன செலவினங்களுக்கான முதலீடு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு. சாலை பணிகளுக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு .பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும். செயற்கை நுண்ணறிவிற்காக மேன்மைமிகு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளன. தரவு மேலாண்மை கொள்கை வகுக்கப்படும் 9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படும் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும். முதல் முறை – பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் இந்த முறையும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியாது. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். 12. 5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை வாங்கினால் 25 சதவிகிதம் வரி இருக்கும். அதற்கு மேல் போனால் 30 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

இன்றைய பட்ஜெட் உரையில் சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது ஒரு முறை மட்டும் முதலீடு செய்வதற்கான சிறு சேமிப்பு திட்டம். 2025 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பெண்கள், சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் 7.5% என்ற நிலையான வட்டி விகிதம் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் உள்ள தொகையில் பாதி தொகையை எடுத்துக்கொள்வதற்கான வசதியும் இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதே போல மூத்த குடிமக்களுக்கு அஞ்சலகங்களில் வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்து ஆண்டு தொடர் வைப்பு கணக்கு போன்ற ஒன்பது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமானது ஒவ்வொரு காலாண்டும் அரசால் நிர்ணயிக்கப்படும். அதனடிப்படையில், தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும். 15 வருட பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டியும், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் 6.8 சதவீத வட்டியும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டியும் வழங்கப்படும். 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டி தொடர்ந்து நீடிக்கும். 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்குகளுக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படும். 1 முதல் 5 ஆண்டுகளுக்கான முதலீட்டு கணக்குகளுக்கு 5.5 சதவீதம் முதல் 6.7 சதவீத வட்டியும் கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய மத்திய பட்ஜெட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு 7.5 சதவிகித வட்டியில் புதிய சேமிப்பு திட்டமும், முதியோர் வைப்பு நிதி உச்சவரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புகை மாசு, வாகனங்கள் குறித்து உரையாற்றிய அவர், பழைய வாகனங்களை மாற்றுவது பற்றி தெரிவித்தார். “வாகனங்களை மாற்றுவது என்பது நாட்டின் முக்கியமான கொள்கை. அதாவது, பழைய அரசியலை மாற்றுவது..” என்று அவர் சொன்னவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது. உடனே நிர்மலா சீதாராமனும் சிரித்துக் கொண்டே, “எனக்கு தெரியும். நன்றி.

பழைய மாசை ஏற்படுத்தும் வாகனங்களை மாற்றுவது. இதுவும் சரியாக இருக்கும் அல்லவா. அதிக மாசை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவது நாட்டின் பொருளாராத்தை எடுத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய அரசின் பழைய வாகனங்களை அழிப்பதற்கு கடந்த 2021 -22 பட்ஜெட்டில் தேவையான நிதியை ஒதுக்கினோம். பழைய வாகனங்கள் மற்றும் பழைய ஆம்புலன்ஸுகளை மாற்றுவதில் மாநில அரசுகளும் பங்காற்றின. வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் வாகன புகை இல்லாத நாடாகஇந்தியா உருவாகும்.” என்றார்.