என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் என மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நடந்த, நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இதையடுத்து பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அமித்ஷா பேசியதாவது:-
தேசிய புலானாய்வு முகமை (என்ஐஏ) நாடு முழுவதம் விரிவடைந்து வருகிறது. என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரணை மேற்கொள்ள என்ஐஏ பெரிதும் உதவுகிறது. போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த என்ஐஏ துணைபுரிகிறது. பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான குற்றங்கள் தேசிய தரவுத்தளத்தில் கண்காணிக்கப்படுகிறது. பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்பை தடை செய்ததால், பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாஜ., ஆட்சியில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.