முதல்வர் ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலகத்தில் பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
முதல்வர் ஸ்டாலினை இன்றைய தினம் பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். ஒரு வேளை கூட்டணி விவகாரம் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த சந்திப்புக்கு பிறகு அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினேன். நிச்சயமாக நாங்கள் இருவரும் அரசியல் குறித்து எதையும் பேசவில்லை. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பேசினேன். நீர் மேலாண்மை, அரியலூர் சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பேசினேன். தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.