வடகொரிய அதிபர் குறித்து தகவல் தேடியவருக்கு மரண தண்டனை!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், ‘பியூரோ 10’ என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ‘கூகுள்’ இணையதளத்தில் சமீபத்தில், அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை தேடியுள்ளார். இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.