அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம். 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது.
இந்நிலையில் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். இதற்காக ராகுல் காந்தி நாளை சூரத் செல்ல இருக்கிறார்.