அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: சரத்குமார்

அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கையை வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடி பணமிழந்து, கடனாளியாகி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். எனவே மனித உயிர்களை காவு வாங்கும் இதுபோன்ற செயலிகளை முற்றிலுமாக தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், நீண்ட நாட்கள் இழுத்தடிப்புக்கு பிறகு இரண்டாவது முறையாக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தார். மேலும், அந்த மசோதா முந்தைய மசோதாவில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்து வந்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் மத்திய அரசுக்கு அவசர கோரிக்கையை வைத்துள்ளார். அதில், சூதாட்டம் தடை என்று சொல்லும்போது அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் ஆபாச இணையதளங்களையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.அந்த வகையில், பார்னோகிராஃபி உள்ளிட்ட செயலிகள் இணையதளங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.