மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கொரோனா!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களில் முக்க்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே டெல்லியில் இன்று நடைபெறும் விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.