சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த ,சட்டப்படி, காலை 7 மணிக்கு அலுவலகம் சென்றால் மாலை 7 மணிக்கு திரும்பும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை தற்போது திமுக கூட்டணி கட்சிகளே சட்டசபையில் எதிர்த்து உள்ளன. தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை சட்டசபையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. கடும் எதிர்ப்பிற்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டப்படி ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வேலை நிறுத்தத்தை 12 மணி நேரம் வரை நீட்டிக்க முடியும். இதற்கு முன் 8 மணி நேரத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பது நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் 12 மணி நேரம் என்பது கட்டாயம் கிடையாது. அதனால் 8 மணி நேரம் கட்டாயம் என்று இருப்பது போல 12 மணி நேரம் கட்டாயம் கிடையாது. 12 மணி நேரம் வேண்டாம் என்றால் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களிடம் மறுக்க முடியும்.

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன. இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதலீடு அதிகரித்தாலும் ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைவாக உள்ளது. ஐடி துறையில் பெங்களூர் அளவிற்கு நாம் இன்னும் முன்னேறவில்லை. ஐடி நிறுவனங்களை இங்கே கொண்டு வர கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நாம் வெளியிட வேண்டும். வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் ஐடி நிறுவனங்கள் அதிக அளவிற்கு தமிழ்நாடு நோக்கி வரும் என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சட்ட மசோதா குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும். வாரத்துக்கான 48 மணி நேர வேலையை 4 நாளில் முடித்தபின் 5 வது நாளில் வேலைசெய்ய விரும்பினால் கூடுதல் சம்பளம் விரும்பக்கூடிய தொழிலாளர்கள், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதிய சட்டம் பொருந்தும் என்று அமைச்சர் கணேசன் கூறினார்.

பணி நேரத்தை 12 மணி நேரத்திற்கு மேல் அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த மாற்றங்களை ஏற்படுவதற்கு வசதியாக பணி விதி, ஊதிய விதி, அலுவலக உறவு மற்றும் பணி பாதுகாப்பு விதி, ஆரோக்கியமான பணி சூழல் விதி ஆகிய 4 விதிகளில் மாற்றம் ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இதை 13 மாநிலங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாகவும், மேலும் சில மாநிலங்களில் ஏற்கும் முடிவில் இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பல்வேறு மாநில அரசுகள் இந்த புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டதால் வரும் ஆண்டிலேயே இந்த 4 நாள் வேலை விதிமுறை அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. மீதம் உள்ள 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மற்ற மாநிலங்கள் ஒப்புகொள்ளாத காரணத்தால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதா ஒன்று சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது தொடர்பான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. 12 மணி நேரம் வேலை என்றாலும் 4 நாட்கள் மட்டுமே வேலை. 3 நாட்கள் விடுப்பு கொடுக்கப்படும்.

ஐடி நிறுவனங்கள் சில வைத்த கோரிக்கை காரணமாவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதை தற்போது திமுக கூட்டணி கட்சிகளே சட்டசபையில் எதிர்த்து உள்ளன. தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை சட்டசபையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. தொழிலாளர் நலனுக்கு எதிராக இருப்பதாகவும், மக்களின் அடிப்படை வாழ்க்கையை இது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.