உக்ரைன் போரில் கடந்த 5 மாதங்களில் சுமாா் 20,000 ரஷ்ய வீரா்கள்பலி!

உக்ரைனில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் ரஷ்யாவைச் சோ்ந்த 20,000 வீரா்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறியதாவது:-

கடந்த 5 மாதங்களில் சுமாா் 20,000 ரஷ்ய வீரா்கள் உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டுள்ளனா். இது தவிர, உக்ரைன் தாக்குதலில் சுமாா் 80,000 வீரா்கள் காயமடைந்துள்ளதாக எங்களது உளவுத் தகவல்கள் மூலம் மதிப்பிடப்படுகிறது. பெரும்பாலான ரஷ்ய உயிரிழப்புகள் பாக்முத் பகுதியில்தான் நேரிட்டுள்ளது. டான்பாஸ் பிராந்தியத்தில் (கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதி) ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தோல்வி அடைந்து வருவதையே இது காட்டுகிறது. குறிப்பாக, முக்கியத்துவம் வாய்ந்த பாக்முத் நகரை ரஷ்யாவால் கைப்பற்றவே முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.