ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடும் இழுபறிக்கு நடுவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனது சீன பயணத்தின்போது நேரில் சந்தித்து பேசினார். இதன்மூலம் இருதரப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பலப்படும் என நம்பிக்கை தெரிந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தனியார் அமைப்பு சார்பில் தேர்தலுக்கான நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களிடையே மேடையில் பேசினார். அப்போது தனது உரையின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வதிகாரி என ஜோ பைடன் குறிப்பிட்டார். நவீன பலூனை அமெரிக்காவுக்குள் அனுப்பி அதன் செயல்பாடுகளை சீனா கண்காணித்ததாக அமெரிக்க ராணுவம் குற்றஞ்சாட்டியது. அதனை ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தியதாகவும் அது தெரிவித்தது. இதனை மறுத்த சீன அரசு வானிலையை ஆய்வு செய்வதற்காகவே அந்த பலூனை பயன்படுத்தியதாகவும் அது வழிதப்பி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக கூறியது.
இந்தநிலையில், நம் ராணுவத்தை கொண்டு சீனாவின் சதிதிட்டத்தை தகர்த்த விவகாரம் ஜி ஜின்பிங்கை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கும். மேலும் சர்வாதிகாரிகளுக்கு இது பெரிய அடிதான் என்று அவர் ஜின்பிங்கை தாக்கி பேசினார்.