புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடி லேசர் ஒளியால் ஒளிபரப்பப்பட்டது.
துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நேற்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.