சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழரான தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னுக்கு வாழ்த்துகள்! உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களைப் பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது. தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.