அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் ரெய்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்ட நிலையில், அவர் அதன் பிறகு கைது செய்யப்பட்டார். அவர் இப்போது சிறையில் இருக்கிறார். புழல் சிறையில் அவர் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே அமலாக்க துறையினர் அதிரடி சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.