நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த அரசை விமர்சிக்காமல் ஜால்ரா தட்டினால் விஜயலட்சுமி கொடுத்த புகார் குப்பைக்கு போயிருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் இப்போதுதான் பார்த்தேன்.. வழக்கறிஞர் கூட பேசினார். அவர் என்ன சொல்கிறார் என்றால் 2011ல் வழக்கு போடப்பட்டு அதனடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு விஜயலட்சுமி புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறார். 2011-ல் இது முடிந்து விட்டது. 15 வருடம் கழித்து இந்த வழக்கை மீண்டும் எடுப்பது ஏன்? இந்த அரசாங்கத்திற்கு ஜால்ரா தட்டினால் கேஸ் இல்லை. விமர்சனம் செய்தால் வழக்கு.. என் மீது வழக்கு.. இப்படி அனைவர் மீதும் வழக்கு போட்டு வைத்து இருக்கிறார்கள். இதே ராயபுரம் தொகுதிதியில் கள்ள ஓட்டு போட்டவர் சமூக விரோதி.. 10 ,12 வழக்கு இருக்கு.. அவரை கட்சி காரர்கள் ஆதரவோடு பிடித்து கொடுத்தோம்.
அப்படி ஒரு சமூக விரோதியை பிடித்து கொடுத்தால் வழக்கு எங்கள் மீது போடுகிறார்கள். அதுவும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு போட்டார்கள். உள்ளே வைத்த பிறகு நான் வெளிவரக்கூடாது என்பதற்காக அண்ணன் தம்பிக்குள் நடக்கும் சிவில் பிரச்சினை.. அது காலம் காலமாக ஆலந்தூர் கோர்ட்டில் நடக்குது.. அதை எடுத்து பார்த்து 10 நாள் உள்ளே வைத்தார்கள்.
இந்த வழக்குக்கு எல்லாம் பயப்படும் இயக்கம் அதிமுக இல்லை. ஏனெனில் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இப்போ சீமான் அரசை விமர்சனம் செய்து பேசி வருகிறார். அதனால் விஜயலட்சுமி புகார் கொடுத்ததும் வாங்க வாங்க எழுதிக்கொடுங்க.. உடனே வந்து விசாரணை.. அதனால், அரசியல்வாதிகளை வழக்குகள் முலம் அச்சுறுத்தி விடலாம் என்ற வகையில் நியாயத்தை எடுத்து சொல்வது..
மக்களுக்காக ஆதரவு கொடுப்பது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைத்தால் அது ஒருநாளும் நடக்காது. உள்ளாட்சி தேர்தலின் போது நானும் கட்சியினரும் உள்ளே போயிட்டு வந்தோம். அதற்காக பத்திரிகையாளரை சந்திக்காமல் இருக்கிறோமோ.. திமுகவை விமர்சிக்காமல் இருக்கிறோமா.. தினமும் விமர்சித்து கொண்டு இருக்கிறோம். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த அரசை விமர்சிக்காமல் ஜால்ரா தட்டினால் விஜயலட்சுமி கொடுத்த புகார் குப்பைக்கு போயிருக்கும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.