சீமான் மீசை வெச்ச ஆம்பளைன்னா படையோடு வா: வீரலட்சுமி!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னை தொட்டுப் பார்த்தால் பல நூறு படையை இறக்கிவிடுவேன் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கட்சியாவது ஒன்னாவது வீரலட்சுமியை வெட்டிப் போட்டு போய்கிட்டே இருப்பேன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்குமோ? ஸ்கெட்ச்சையே தூக்க முடியாது உன்னால.. என கடுமையாகத் தாக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பாக வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் சுற்றி வளைத்து தாக்க முய்னறனர். அப்போது செய்தியாளர்களிடம் வீரலட்சுமி கூறியதாவது:-

நான் ஷத்திரிய ஜாதி. என் தாத்தாவும் பாட்டியும் என் காலை ஒருத்தன் மிதிச்சா தலையை சீவுன்னு சொல்லி இருக்கிறார். என் மாமானர் யார் என வடசென்னையில் கேளுங்க.. ஒரு மீசை வெச்ச ஆம்பளையா இருந்த சீமானும் அவரது படையும் என்கிட்ட தனியாக வரட்டும்.. நான் அண்ணாசாலையில் நிற்கிறேன். ஒற்றை ஆளாக ஆயுதமே இல்லாம நிற்கிறேன். தைரியமா இருந்தா என் மீது வைத்து பார்க்கட்டும். என்னை சரிக்கு சரியான ஆம்பளையாகத்தான் சீமான் பார்க்கிறார்.. அதனால்தான் அரிவாளால் வெட்டுவேன் என்கிறார்.. நானும் அரிவாள் எடுக்கிறேன். நான் வன்முறையை கையில் எடுக்கவில்லை. என் மீது கை வைக்கும் போது நான் என்ன பூப்பறிச்சுகிட்டா இருப்பேன்? என் தம்பிக சும்மா விட்டுருவாங்களா? நான் யாருன்னு தெரியாம விளையாடுற.. என் பின்னாடி பெரிய பல நூறு படையே இருக்கு.. இறக்கிவிட்டா அவ்வளவுதான். விஜயலட்சுமிக்கு சீமான் செட்டில்மென்ட் செய்துவிட்டார். அந்த விவகாரம் எனக்கு 2 நாட்களுக்கு முன்னரே தெரியும். அதனால்தான் விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றார். இவ்வாறு வீரலட்சுமி கூறினார்.