‛மக்களோடு ஸ்டாலின்’: நாளை அறிமுகமாகும் புதிய செயலி!

திமுகவின் பவளவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ‛மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூரில் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இந்நிலையில் தான் திமுகவின் பவளவிழா நாளை வேலூரில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் மறைந்த முதல்வர் அண்ணா, பெரியார், பாரதிதாசன், கருணாநிதி, அன்பழகன் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இது ஒருபுறம் இருக்க தற்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய செல்போன் செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்ய உள்ளார்.

அதாவது ‛மக்களோடு ஸ்டாலின்’ என்ற செயலி என்பது முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் செயல்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள், முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு, தமிழக அரசின் செயல்பாடுகள குறித்த விபரங்கள் அந்த செயலியில் இடம்பெற உள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் குறித்த முழுவிபரமும் இந்த செயலியில் இடம்பெற உள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தற்போது திமுக தயாராகி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் திமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது ‛மக்களோடு ஸ்டாலின்’ என்ற செயலியை அறிமுகம் செய்வதன் மூலம் திமுக அரசின் சாதனைகளை மக்கள் தங்களின் செல்போனில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்ள முடியும். இது நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுக்கு வலுசேர்க்கலாம் என்ற வகையில் ‛மக்களோடு ஸ்டாலின்’ என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.