தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு, படூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் படூர், சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் நிறுவனம் என சோதனை நடத்தப்படுகிறது. சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்துகிறது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.