நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துணை வேந்தர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருந்தால் பொதுமக்களுடன் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும். காலியாக உள்ள மூன்று பல்கலைக்கழக (மெட்ராஸ் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம்) துணைவேந்தர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அவர்களும் தமிழ் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்.
சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் குற்றச்சாட்டு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளது தேர்தல் தேதி அறிவித்த பின்னர் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.