ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை, ஊசிப்போன உணவு பண்டம். எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய உள்ளது என்பது குறித்து ஆளுநர் உரையில் இல்லை. தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் முறையாக இல்லை. ஆளுநர் உரை வெறும் வார்த்தை ஜாலங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல எந்த விதமான மக்கள் நல திட்டங்களையும் தமிழ்நாடு அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்றார்.