பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டில் நக்சல் தீவிரவாதம் 52 சதவீதம் குறைந்துள்ளது: அமித் ஷா

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நக்சல் தீவிரவாத சம்பவங்கள் 52 சதவீதமும், உயிரிழப்பு 69 சதவீதமும் குறைந்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மற்றும் அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நக்சல் தீவிரவாத சம்பவங்கள் 52 சதவீதமும், உயிரிழப்பு 69 சதவீதமும் குறைந்துள்ளன. தீவிரவாத சம்பவங்கள் 14,862-லிருந்து 7,128 ஆக குறைந்துள்ளன. உயிரிழப்புகள் 6,035-லிருந்து 1,868-ஆக குறைந்துள்ளன. பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு 1,750-லிருந்து 485 ஆக குறைந்துள்ளது. அப்பாவி மக்களின் உயிரிழப்பு 4,285-லிருந்து 1,383-ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில்அமித் ஷா வெளியிட்டுள்ள தகவலில், ‘‘நக்சல் பாதிப்பு பகுதிகளில் போதிய சுகாதார மற்றும் கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்தியதால் ஏழைமக்களின் இதயங்களை மோடி அரசு வென்றுள்ளது. பிரதமரின் தொலைநோக்கு கொள்கைகளுக்கு நன்றி’’ என குறிப்பிட்டுள்ளார்.