பொன்முடி எதிரான வழக்கில் ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறி சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. இது, அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில், குற்றம்சாட்டப்பட்ட சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். மூன்று பேர் ஆஜராகாததை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், மேலும் ஒரு முக்கிய சாட்சி , பிறழ் சாட்சியமானது. இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியம் ஆன நிலையில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.