“கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:-
முஸ்லிம்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு தேர்தல் ஆணையம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படாதது துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை மவுனம் காத்து வருகிறது.
இது உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சினை. தேர்தல் ஆணையம் எந்த ஒரு கட்சிக்கும் சார்பற்றது என்று காட்டியிருக்க வேண்டும். பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சால், நாட்டில் பாஜகவுக்கு எதிரான கருத்து வலுப்பெற்று வருகிறது. அதோடு வரும் காலத்தில் பாஜக மேலும் தனிமைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.