நேபாளத்தில் 40 பயணிகளுடன் பயணித்த இந்திய பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் 40 பேருடன் பயணித்த இந்திய பயணிகள் பேருந்து ஒன்று தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தை நேபாள காவல் துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில், 14 பேர் பலியானதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறுகையில், “UP FT 7623 என்ற உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட அந்தப் பேருந்து மர்ஸ்யாங்டி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது” என்றார். 45 போலீஸார் கொண்ட குழு விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.