லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படம் குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில், மிகப்பெரிய நடிகரான அவருடன் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும் என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர். கடைசியாக வெளியான ‘வாரிசு’ படத்தில் பேமிலி சென்டிமெண்டில் கலக்கிய விஜய், தற்போது லோகேஷ் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தளபதி 67 என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப்படத்திற்கு ‘லியோ’ என தலைப்பு வைக்கப்பட்ட டைட்டில் வீடியோ அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற செய்து வருகிறது.
‘லியோ’ படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், திரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மற்றும் சாண்டி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் விஜயுடன் நடிப்பது குறித்து அர்ஜுன் கூறும் போது, லியோ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. இந்தப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்ஷன் தோற்றத்தில் காண்பிக்கபோகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய் குறித்து பேசும்போது, மிகப்பெரிய நடிகரான அவருடன் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும் என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.