மிஸ் யூ கேப்டன்: ஏ.ஆர் முருகதாஸின் உருக்கமான பதிவு!

எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே வந்து நிக்கிறேன் இது கனவா? நிஜமா? என்று தெரியவில்லை. மிஸ் யூ கேப்டன்! என்று ஏ.ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.

ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். விஜய்-க்கு திருப்பு முனையாக அமைந்த துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை இயக்கினார். மக்கள் மனதில் என்றும் ஏ.ஆர் முருகதாஸ் படங்களுக்கு என்றும் எதிர்பார்ப்புண்டு. கடைசியாக அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தர்பார் திரைப்படம் பெரிதாக வசூல் இல்லை. பின் ஏ.ஆர் முருகதாஸ் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவந்த அகிரா படத்திற்கு பிறகு சல்மான் கானை வைத்து பேன் இந்தியன் படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு இந்த படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ரமணா படத்தின் லொகேஷனுக்கு 23 வருடங்களுக்கு பிறகு சென்றுள்ளார். Sk23 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.

இதுகுறித்து ஏ ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் “23 வருடங்களுக்கு பிறகு Sk23 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரமணா படம் எடுத்த அதே லொகேஷனுக்கு வந்து இருக்கிறேன், எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே வந்து நிக்கிறேன் இது கனவா? நிஜமா? என்று தெரியவில்லை. மிஸ் யூ கேப்டன்! என உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.