‘சத்யா’ பட ரீமேக்கில் அசோக் செல்வன் நடிக்கிறார்!

தமிழ் சினிமாவில் கைவசம் ஏராளமான படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார் அசோக் செல்வன். இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி சக்கை போடு போட்டிருந்தது ‘போர் தொழில்’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் அசோக் செல்வன்.

‘சூது கவ்வும்’ படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை துவங்கியவர் அசோக் செல்வன். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படத்தில் சைடு ரோலில் நடித்திருந்தார். இதனையடுத்து தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே, ஹாஸ்டல், சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் இவரது நடிப்பில் ரிலீசான ‘ப்ளு ஸ்டார்’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் தனக்கு ‘போர் தொழில்’ என்ற வெற்றி படத்தை கொடுத்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கடந்தாண்டு ரிலீஸ் ஆகியிருந்தது ‘போர் தொழில்’ படம். இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வசூலிலும் சக்கை போடு போட்டது.

இந்நிலையில் இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அசோக் செல்வன். இப்படம் கமலின் ‘சத்யா’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல், அமலா நடிப்பில் வெளியான படம் ‘சத்யா’. இப்படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை’ எவர்கிரீன் பாடலாக இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. ‘சத்யா’ படத்தில் வேலையில்லாத அநீதிக்கு எதிராக கொந்தளிக்கும் இளைஞராக கமல் நடித்திருப்பார். இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக திகழும் சத்யா ரீமேக்கில் தான் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கவிருக்கிறாராம். தற்போது கூட ‘சத்யா’ பட கமல் லுக்கிலே அசோக் செல்வன் வலம் வருகிறார். இதனால் இந்த தகவல் ஏறக்குறைய உறுதி என கூறப்படுகிறது.