இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பேனரில் இயக்கப் போவதாக அறிவித்த நிலையில், அதிரடியாக படகுழுவினர் ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் பறந்து சென்றுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக திரிஷா காஷ்மீருக்கு செல்வதாக கூறப்படுகிறது.
‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்ட நிலையில் தளபதி 67 படப்பிடிப்புக்காக திரிஷா காஷ்மீர் செல்லவுள்ளதாகவும் இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் கிளம்பியதாகவும் தெரிவித்து பலரும் திரிஷாவின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து அசத்திய நடிகை த்ரிஷா அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். சமந்தா நடிக்க வேண்டிய ரோல் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக இந்த ரோல் த்ரிஷாவுக்கு சென்றதாக கூறுகின்றனர். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்த த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், ஹாஷ்டேக் த்ரிஷா டிரெண்டாகி வருகிறது.
மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு பறந்து செல்ல த்ரிஷா மாஸ்க் அணிந்து செம சைலன்ட்டாக நடந்து செல்லும் லேட்டஸ்ட் புகைப்படங்களும் வெளியாகி சோஷியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகிறது.