அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: வாணி போஜன்!

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். தமிழில் ஓ மை கடவுளே படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமான வாணி போஜன், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வாணி போஜன் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் நடிகை வாணி போஜனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இந்த தொடரில் தாசில்தாராக, சத்யா என்ற கேரக்டரில் தன்னுடைய கணவன் பிரகாஷ் உள்பட அனைவரையும் அரவணைத்து செல்லும் கேரக்டரில் நடித்திருந்தார் வாணி போஜன். இந்தத் தொடர் இவரை பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. இந்தத் தொடரைத் தொடர்ந்து சில தொடர்களில் நடித்த வாணி போஜன். தெலுங்கில் 2019ம் ஆண்டில் வெளியான மீக்கு மாத்திரமே செப்தா என்ற படத்தின் மூலம் பெரியத் திரையில் அறிமுகமானார். இதையடுத்து, தமிழில் ஓ மை கடவுளே என்ற படத்தில் இவரது அறிமுகம் அமைந்தது. இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படத்தின் நீளம் கருத்தி அந்த காட்சி டெலிட் செய்யப்பட்டுவிட்டது.

இதைத் தொடர்ந்து ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர் ட்ரிப்பிள்ஸ், செங்களம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணைய தொடர்களிலும் நடித்துள்ளார். செங்களம் வெப் தொடரில் அரசியல்வாதியாக தனது கதை பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார். இந்த தொடர் இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் வாணி போஜன் கொடுத்த பழைய பேட்டி ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி பிரபல நடிகையாக வேண்டும் என்கிற ஆசை எனக்கு இல்லை. எனக்கு நிறைய பட வாய்ப்புகள் இருக்கிறது. எனக்கு ரசிகர்களின் பாராட்டு போதும் என்றார். மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். இருப்பதை விட்டு பறக்க ஆசைப்பட வேண்டாம் என்று அம்மா சொன்னார்கள். இதனால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.