பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுவித்ததற்கு குஷ்பு கண்டனம்!

பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் 11 பேர், சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டதற்கு, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002 குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் 11 பேர், சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டனர். இது நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளதாவது:-

பாலியல் பலாத்காரத்தால் ஆன்மா அச்சுறுத்தப்பட்ட பெண்ணுக்கு கட்டாயம் நீதி கிடைத்தாக வேண்டும். இதில் தொடர்புடைய யாரும் விடுதலையாக கூடாது. அப்படி செய்தால், அது மனித குலத்திற்கும், பெண்ணினத்திற்கும் இழைக்கப்படும் அவமானம். பில்கிஸ் பானு மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட, எந்தவொரு பெண்ணிற்கும் அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஆதரவு தேவை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

குஜராத் மாநில பா.ஜ., அரசின் முடிவை எதிர்த்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு, கடுமையாக விமர்சித்துள்ளார்.