யார் வேண்டுமானாலும் என் படத்தை விமர்சிக்கலாம்: இயக்குநர் மிஷ்கின்!

யார் வேண்டுமானாலும் என் படத்தைப் பார்த்து பாராட்டவோ, விமர்சிக்கவோ செய்யலாம் என்று, இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

தன் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என மிஷ்கின் பேசியதாக வெளியான செய்திக்கு மிஷ்கின் விளக்கமளித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் மிகஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்ததாகவும், குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதால் அந்த காட்சிகளை நீக்கி விட்டதாகவும் மிஷ்கின் தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பு அடங்கும் முன்னே தனது படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என மிஷ்கின் பேசியதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்த நிலையில் இயக்குநர் மிஷ்கின் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என நான் பேசியதாக ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமேன நான் சொன்னதை மாற்றியிருக்கிறார்கள். நான் பேசியதன் அர்த்தம் வேறு. யார் வேண்டுமானாலும் என் படத்தைப் பார்த்து பாராட்டவோ, விமர்சிக்கவோ செய்யலாம். இது அனைவரின் உரிமை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.