அமெரிக்க பார்லிமென்டிற்கு நடந்த இடைத்தேர்தலில் பைடனின் ஜனநாயக கட்சி வெற்றி!

அமெரிக்க பார்லிமென்டிற்கு நடந்த இடைத்தேர்தலில், செனட் சபை அதிபர் ஜோ பைடனின் உள்ள ஜனநாயக கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சி கட்டுப்பாட்டில் வந்தது. குடியரசு கட்சி 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளுக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 100 இடங்களுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், பணவீக்கம் மற்றும் பைடனின் செல்வாக்கு சரிவு போன்ற காரணங்களினால், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை ஆதிக்கம் செலுத்தலாம் என குடியரசு கட்சி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், ஓட்டுப்பதிவு முடிவில் செனட் சபை ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டில் வந்தது. அக்கட்சி 50 இடங்களிலும், குடியரசு கட்சி 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் குடியரசு கட்சி 211 இடங்களிலும், ஜனநாயக கட்சி 204 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முடிவு தொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் முன்னெடுத்து செல்ல காத்திருக்கிறேன். ஜனநாயக விரோத, சர்வாதிகார, மோசமான பிளவுபடுத்தும் சக்திகளை அமெரிக்க மக்கள் உறுதியாக நிராகரித்துவிட்டனர் என்று அவர் கூறினார்.