18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம் என அமேசான் நிறுவனம் கூறியுள்ளது. பணி நீக்கமானது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலாளர், ஊழியர்களுக்கு இன்று காலை ஒரு செய்தி அனுப்பி உள்ளார். அதில், தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்வது சவாலாக உள்ளது. இதனால் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது. இந்த பணி நீக்கமானது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது அந்த நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.