வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துவது விலக்கிக் கொள்ளப்பட்டது. கொரோனா வேகமாக பரவும் சூழலில், 3 ஆண்டாக அமலில் இருந்த தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை சீனா தளர்த்தியுள்ளது.
சீனாவில் வூஹான் நகரில் உருவான கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. எல்லைகள் மூடப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பை அந்நாட்டு சுகாதாரப் பட்டியலில் “ஏ” பிரிவில் வைத்திருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வந்தது. முன்னதாக, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அரசு விடுதிகளில் இரண்டு வாரம் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது. இது படிப்படியாக மூன்று நாள்கள் கண்காணிப்புடன் ஐந்து நாள்களாகக் குறைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் மீண்டும் பரவி வருவதையடுத்து, பல்வேறு செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய போராட்டங்களை அந்நாட்டு எதிர்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை சீனா தளர்த்தியுள்ளது.