இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய ஆயுத போராட்டமே அகிம்சை இயக்கத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று ‘Revolutionaries – The Other Story of India Won Its Freedom’ எனும் புத்தம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை பொருளாதார நிபுணரும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால் எழுதியுள்ளார். இந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார். இந்த புத்தகம் ஆயுதம் தாங்கிய போராட்டக்ககாரர்களை பற்றியது என்று கூறியுள்ளார். அமித்ஷா பேசியதாவது:-
இந்தியாவை சுரண்டிய ஆங்கிலேயர்களை எதிர்த்து கோடிக்கணக்காண மக்கள் போராட்டத்தில் இறங்கினாலும், ஆயுதம் ஏந்தி போராடிய வீரர்களுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை ஆயுதப் போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் சுதந்திரத்தை பெறுவதற்கு மேலும் சில பத்தாண்டுகள் ஆகியிருக்கும். ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு அகிம்சை போராட்டங்கள் பெரிய அளவு உதவி செய்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது. ஆனால் அதற்காக ஆயும் ஏந்திய போராட்டம் முக்கியமற்றது என்பதல்ல. இவ்வாறு ஆயும் ஏந்திய போராட்டங்கள் ஒழுங்கற்ற மற்றும் தனிநபர் போராட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அகிம்சை போராட்டத்தை நியாயப்படுத்த ஆயுதமமேந்திய போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. இந்தியாவை பொறுத்த அளவில், இந்தியாவில் ஆயுதப்போராட்டங்கள் நியாயமான முறையில் எழுதப்படவில்லை. சுதந்திர பேராட்டத்தின் கதையை இந்திய கண்ணோட்டத்தில் சொல்லும் பொறுப்பை கொண்டவர்கள் இந்த கடமையை சரியா செய்ய தவறிவிட்டார்கள்.
பகத்சிங் தூக்கிலடப்பட்டபோது லாகூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மக்கள் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். உணவு கூட உண்ண முடியாத அளவுக்கு சோகம் அவர்களை வாட்டி வதைத்தது. அவரின் உயிர் தியாகம் சுந்திர போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த உயிர் தியாகம் உடனடியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அவரது தியாகத்திற்கான போதிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. இது இவருக்கு மட்டுமல்ல இவரைப்போல உயிர் தியாகம் செய்த பல வீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. நான் அரசியலில் இருப்பதால் இப்பிரச்னை குறித்து மேலும் பேச விரும்பவில்லை. அப்படி பேசினால் இது அரசியலாகிவிடும். எப்படி இருப்பினும் இவர்களுக்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் சன்யால் எழுதிய இந்த புத்தகம் சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாதவர்களை பற்றியது. இவர்கள் குறித்து பொது சமூகத்தில் நிலைத்துள்ள பிம்பத்தை உடைப்பதே இப்புத்தகத்தன் நோக்கமாகும். தங்கள் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ளாத குடிமக்கள் ஒரு பெரிய தேசத்தை உருவாக்க முடியாது. இந்தியாவின் சரியான வரலாறு எழுதப்பட வேண்டும் என்று மாணவர்களையும், வரலாற்று ஆசியர்களை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புத்தகம் சாவர்க்கரின் வாழ்க்கையையும், ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ அவுரிபிந்தோ ஆகியோரின் வாழ்க்கையையும் விரிவாக விவரிக்கிறது. ஸ்ரீ அவுரிபிந்தோதான் இந்தியாவை விஸ்வகுருவாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டவர் என்று பாஜகவினரால் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.