ஆளுநர் பேச்சு குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பேச்சு குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. ஜனநாயக மாண்பை காக்க எனது சக்தியை மீறி செயல்படுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டசபை கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இன்று கவர்னர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். இந்நிலையில், சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் என்பதை நிரூபித்து காட்டிய தினம் ஜனவரி 9ம் தேதி ஆகும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். பொறுப்பு அதிகரிக்கும்போது ஓய்வு குறைகிறது. தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தால் 1.3 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். 10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்துள்ளோம். ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றத்தையும் நாள்தோறும் கண்காணித்து வருகிறேன். சொன்னதை செய்ததால் வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆளுநர் பேச்சு குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. ஜனநாயக மாண்பை காக்க எனது சக்தியை மீறி செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.