இளைஞர்கள் நாட்டை வழி நடத்தும் வகையில் செயல்படவேண்டும்: பிரதமர் மோடி

இளைஞர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நாட்டை வழி நடத்தும் வகையில் செயல்பட வேண்டும். ஏனென்றால் நீங்கள் தான் நாட்டின் உந்து சக்தி என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி ரயில்வே விளையாட்டு அரங்கில் தேசிய இளைஞர் விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கர்நாடகா, தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களின் இளைஞர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

இளைஞர் சக்தியே நாட்டின் உந்து சக்தி ஆகும். ஒரே பாரதம் மகத்தான இந்தியாவை உருவாக்கும் வகையில் இளைஞர்களின் அனைவரும் கலந்து கொள்ள ணே்டும். 40 முதல் 50 சதவீத இளைஞர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்று இந்தியாவை 3வது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் திறமையான இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. உலகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக பிற நாடுகளில் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது.

இளைஞர் சக்தியில் குறிப்பாக தேசத்தின் அதிகாரத்தை வழிநடத்துவதில் பெண்களின் சக்தி சிறப்பாக உள்ளது. சைபர் செக்யூரிட்டி என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பல விஷயங்களைக் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். இளைஞர்கள் முன் பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. வேகமாக மாறிவரும் சூழலில், இளைஞர்கள் ஆய்வு மூலம் நாட்டின் முன்னேற்றத்துடன் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.