தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு!

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகின்றனர். குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். அதன்படி, இந்தாண்டும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.