கொரோனா பலிகளை மறைக்க மருத்துவர்களை சீனா கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தொடர்ந்து கொரோனா பலி எண்ணிக்கையை குறைவாகக் காட்ட, கொரோனா தொடர்பான பலிகளை மறைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக, எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கேற்ப, சுகாதார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளையும் சீன அரசு மாற்றியமைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்ல, கொரோனாவால் மருத்துவமனைக்கு வெளியே பலியாகும் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்வதையே சீனா நிறுத்திவிட்டதாகவும் அந்த தகவல் மேற்கோள்காட்டியுள்ளது.
வெளி உலக அழுத்தம் காரணமாக, சீனா, கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் வரை பலியானதாகத் தகவல் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்பு வரை கொரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து வெறும் ஐந்து ஆயிரத்திலேயே தக்க வைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும், சீனா தற்போது தெரிவிக்கும் எண்ணிக்கையை விடவும், கொரோனா பலி எண்ணிக்கை கடுமையாக அதிகமாக இருக்கும் என்றே அந்த அமைப்பு தெரிவிக்கிறது.