புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது என்றும், அது பற்றி படிக்காமலும், அதனை அறியாமல் சிலர் எதிர்த்து வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.
சென்னை தனியார் பள்ளியின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-
மகிழ்ச்சியான உலகத்தை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கே உள்ளது. புதிய கல்விக்கொள்கையினால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடைந்திட முடியும். புதிய கல்விக்கொள்கை என்பது புரட்சிகரமானது. அதுபற்றி படிக்காமலும் அறியாமையின் காரணமாகவும் சிலர் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வருகின்றார்கள். இந்தியாவின் இலக்கை புதிய கல்விக் கொள்கையின் மூலமாக மட்டுமே அடைந்திட முடியும். அதற்கு 5 மந்திரங்களை நாம் பின்பற்றிட வேண்டும். இந்தியா முழுவதும் வளர்ந்த நாடாக வேண்டும் என்ற லட்சியத்துடன் நாம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.