உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது என மைசூருவில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஜி 20-கூட்டமைப்பு மைசூரு ஜே.எஸ்.எஸ். கல்வி நிர்வாக சார்பில், ஜே.எஸ்.எஸ். ஆஸ்பத்திரியில் நூற்றாண்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

ஜி 20-கூட்டமைப்பு பிரதிநிதிகள் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கியது. இதனால் உலகமே இந்தியாவை திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சக்தி முழு உலகத்திற்கு தெரியவந்துள்ளது. அதனால் ஜி-20 மாநாட்டில் மகாத்மா பற்றி இன்றைய கல்லூரி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவால் வெளிநாடு பொருளாதாரம் 2 மடங்கு உயருகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியர்களான நாம் முழு உலகத்தை ஒரே குடும்பமாக பார்க்கிறோம். இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் பிற நாடுகளுக்கும் உதவி செய்து கொண்டிருக்றோம். கொரோனா காலத்தில் இந்தியா 120 நாடுகளுக்கு இலவசமாக தொற்று மருந்து அனுப்பி உள்ளது. இதனால் உலகத்தின் பல நாடுகள் இந்தியாவை நினைத்து அன்புடன் பாராட்டுகிறது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் நமது கலாசாரத்துடன் நமது கல்வி முறையை மாற்றினார்கள். சீனா, நமது பக்கத்து நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு உதவி செய்து எல்லை பிரதேசங்களை (நாட்டின் எல்லை பகுதிகளை) ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது. இலங்கை தீவு உருவாக்குகிறோம் என்று கூறி கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா, இலங்கைக்கு 5 பில்லியன் பணத்தை நிதி உதவியாக வழங்கி உள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.