உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் ராணுவ வீரர்களை குறி வைத்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர். கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் துருக்கியிடம் பெறப்பட்ட கவச வாகனங்கள் உள்பட உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான ஏராளமான ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைன் உடனடியாக எந்த தகவலும் வெளியிடவில்லை.