அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி எடப்பாடி டெல்லி ஐகோர்ட்டில் மனு!

எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இருப்பினும் அன்றைய தினம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடைக்காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுகவின் புதிய விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அங்கீகரிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதே போன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தாமதிக்காமல் அங்கீகரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதையடுத்து இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.