தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி மனுவை டிஸ்மிஸ் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் கைதாகிக் கொஞ்சக் காலம் சிறையில் கூட இருந்திருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரியிருந்த நிலையில், பல கட்டுப்பாடுகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மோசடி வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரிய ராஜேந்திர பாலாஜி மனுவை டிஸ்மிஸ் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் 6 மாதங்கள் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தை ராஜேந்திர பாலாஜி அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.