சூடானில் மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஆயுதப் படைகள் மற்றும் விரைவு ஆதரவுப் படைகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடான் நாட்டின் ராணுவத்திற்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்து கடுமையான மோதல்கள் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்கள் சூடானில் வசிப்பதால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலில் தற்காலிகமாக 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும், சூடான் தலைநகர் சிக்கியுள்ள வெளிநாட்டினரை பாதுகாப்பாக வெளியேற்ற 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு வெளிநாடுகள் வலியுறுத்தியதை அடுத்து கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு முதல் மீண்டும் போர் நிறுத்தப்பட்டது. நேற்று நள்ளிரவு போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், வெளிநாடுகள் மேற்கொண்ட சமரச முயற்சியால் மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தப்படும் என சூடான் ராணுவமும், துணை ராணுவம் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.