டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயம்!

கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்க்கச் சென்று மாயமான நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில், மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப்பார்க்கும் சுற்றுலா திட்டமாக செயல்படுத்தி வந்த நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியை அமெரிக்க கடலோரக் காவல்படை ஈடுபட்டுள்ளது.

1912ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல், பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. கப்பலில் பயணித்த பயணிகள், ஊழியர்கள் என 2,200 பேர் இருந்தனர். இவர்களில் கிட்டத்தட்ட 700 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த உடைந்த கப்பலின் பாகங்களை சுற்றிப்பார்க்க பயணிகளை அழைத்துச் செல்லும் திட்டம் 2021ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடலுக்கு அடியில் சென்று, உடைந்த பாகங்களைக் காட்டிவிட்டு சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரும் திட்டத்தின் கீழ் 4 பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராத விதமாக மாயமானது. கப்பல் தளத்துடன் இருந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கப்பலுக்குள் 96 மணி நேரத்துக்குத்தேவையான ஆக்ஸிஜன் இருப்பதாகவும், கப்பலை அடையும் பணிகள் துரிதகதியில் நடப்பதாகவும் கூறப்படுகிறது.