ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஈபிள் கோபுரம் மத்திய பிரான்ஸில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சின்னங்களுள் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் அதிக அளவிலான பார்வையாளர்கள் வருகை புரிவது வழக்கம். கடந்த ஆண்டு ஈபிள் கோபுரத்துக்கு 62 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில், ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக இன்று வெளியேற்றப்பட்டது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஈபிள் கோபுர பராமரிப்பு அதிகாரிகள் சார்பில்கூறுகையில், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை நடத்தினர். இதுபோன்ற தருணங்களில் இந்த மாதிரியான சோதனைகள் வழக்கமாக நடைபெறுவதுதான். இது போன்ற சோதனைகள் ஈபிள் கோபுரத்தில் நடத்தப்படும் சூழல் அமைவது மிக அரிதான நிகழ்வே. ஈபிள் கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையார்களும் மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்றனர்.