வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜினிடம் அப்போதே எச்சரித்தேன்: பெலராஸ் அதிபர்

வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் சர்ச்சைக்குரிய முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மரணம் குறித்து முன்பே எச்சரித்தாக பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராகக் கலகம் செய்ய முயன்றவர் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தின் தலைவர் ப்ரிகோஜின். இருப்பினும், புதினுக்கு எதிரான கலகத்தை அவர் சில நாட்களிலேயே கைவிட்டார் ப்ரிகோஜின் அதன் பிறகு வெளிநாடுகளில் தஞ்சம் புகுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் அப்படிச் செய்யாமல் ரஷ்யாவுக்கே திரும்பினார். அதிலும் அதிபர் புதினை சந்தித்ததே நேரடியாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும், ப்ரிகோஜின் விரைவில் கொலை செய்யப்படலாம் என்று அப்போதே அமெரிக்க அதிபர் புதின் தொடங்கி பலரும் எச்சரிக்கை விடுத்து வந்தனர். அவர்கள் அனைவரும் சொன்னபடியே நடந்துவிட்டது. ப்ரிகோஜின் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது. அவர் உட்பட மொத்தம் 10 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விபத்து இங்கே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அதாவது விமானம் விபத்தில் சிக்கும் 30 நொடிகளுக்கு முன்பு வரை விமானத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. கடைசி நொடிகளில் தான் ஏதோ நடந்துள்ளது. விமான விபத்து குறித்த வீடியோவில் கூட விமானம் செங்குத்தாகக் கவிழ்ந்ததும், அதில் இருந்து புகை மற்றும் நெருப்பு வெளியே வருவதும் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், ஏவுகணை தாக்குதல் காரணமாக விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது வாக்னர் குழு தலைவர்களான யெவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி தான் ஏற்கனவே எச்சரித்தாக பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். மேலும் வாக்னர் வீரர்கள் பெலாரஸில் நாட்டில் இருப்பது தான் பாதுகாப்பானது என்றும் தான் வலியுறுத்தியதாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்தார்.

முன்பு புதினுக்கு எதிராகக் கலகம் செய்த போது, ஆரம்பத்தில் கலகம் செய்த அனைவரையும் ஒழிப்பேன் என புதின் கூறியிருந்தார். இருப்பினும், சில நாட்களில் நிலைமை தலைகீழானது. ப்ரிகோஜின் மற்றும் அவரது சகாக்கள் சிலர் பெலாரஸ் நாட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ப்ரிகோஜின்: அங்கு வைத்துத் தான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னரே கலகத்தைக் கைவிடுவதாக ப்ரிகோஜின் அறிவித்தார். அதன் பிறகு சில நாட்கள் ப்ரிகோஜின் ரஷ்யா செல்லாமல் பெலாரஸ் நாட்டிலேயே இருந்தார். அதன் பின்னரே ப்ரிகோஜின் ரஷ்யா திரும்பினார். இப்போது அவர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிகோஜின் இந்த கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து பெலராஸ் அதிபர் மேலும் கூறுகையில், “ப்ரிகோஜினை எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னேன். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என இரண்டு முறை எச்சரித்தேன். இருப்பினும், அவர் எனது எச்சரிக்கையை நிராகரித்தார். ரஷ்யாவில் கலகம் செய்தால் நிச்சயம் கொல்லப்படுவாய் என நான் கூறினேன். அதற்கு அவர் உயிரே போனாலும் பரவாயில்லை. இதை நிச்சயம் செய்வேன் என ஆவேசமாகக் கூறினார். நான் எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்ன இரண்டு பேருமே உயிரிழந்துவிட்டனர். எனக்கு புதினை நன்கு தெரியும்.. அவர் என்ன எப்படிக் கணக்கிடுவார்.. புதின் தான் இதைச் செய்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது உள்ள வாக்னர் குழு வீரர்களுக்கு புதின் ஒரு புது உத்தரவு போட்டிருக்கிறார். ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளமான கிரெம்ளின் தனது வலைதளத்தில் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், “ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு துணை நிற்கும் அனைவரும் ரஷ்யாவிற்கு மாறாத விசுவாசமுடன் உழைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ரஷ்யாவின் தார்மீக மற்றும் நீதி சார்ந்த பாரம்பரியத்தை மேலும் வலுவாக்கும் வகையில் விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,” என்று தெரிவித்து இருக்கிறது.