டிரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் ஆதரவு கொடுக்க தயார்: விவேக் ராமசாமி

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் ஆதரவு கொடுக்க தயார் என குடியரசு கட்சியின் பிரதமர் வேட்பாளர் லிஸ்ட்டில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. பாலியல் புகார், தேர்தல் மோசடி, தேர்தல் முடிவுகள் வெளியானபோது வன்முறையை தூண்டியது என பல வழக்குகள் இருக்கின்றன. இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராவது, பின்னர் சிறைக்கு செல்வது, அங்கிருந்து ஜாமீன் பெறுவது என டிரம்ப் தொடர்ந்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால் அதே சமயம் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபராக வேண்டும் எனவும் காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லையெனில் அடுத்த இடங்களில் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி வேட்பாளராக அறிவிக்கப்படலாம். எனவே இவரும் இதற்காக தீவிரமாக முயன்று வருகிறார்கள். சமீபத்தில் அவர் கட்சி கூட்டத்தில் பேசுகையில், “நான் அதிபரானால் எலான் மஸ்கை எனது ஆலோசராக வைத்துக்கொள்வேன்” என்று கூறியிருந்தார். இது சர்வதேச அளவில் பேசு பொருளான நிலையில் மற்றொரு அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, “நான் அதிபரானால் டிரம்புக்கு பொது மன்னிப்பு வழங்குவேன். ஒருவேளை டிரம்ப் அதிபர் வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு முழு ஆதரவையும் அளிக்க தயார்” என்று கூறியுள்ளார். இந்த பேச்சும் அமெரிக்கா முழுக்க விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.