ரஷ்ய அதிபர் புதினின் போர் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தலைமையகத்திற்கு அருகே மிகப்பெரிய குண்டு வெடித்த நிலையில், ரோஸ்டோவ்-ஆன்-டான் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காமிகேஸ் ட்ரோன்கள் மூலம் ரஷ்ய நகரத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, வெடிக்கச் செய்த நிலையில், மிகப்பெரிய ஃபயர்பால் வெடிகுண்டு ஒன்று, போர் கட்டளை தலைமை அலுவலகத்துக்கு அருகே வெடித்ததால், ‘அவசரகால நிலை’ அறிவிக்கப்பட்டது
ரஷ்ய படைகள் ஆக்ரமிக்க உக்ரைன் பகுதிக்கு அருகே உள்ள ரோஸ்டோவ் – ஆன் – டான் பகுதியில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் கட்டளைகளை பிறப்பிக்கும் தலைமையகத்துக்கு அருகே காமிகேஸ் டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ராணுவ தலைமையகக் கட்டடத்துக்கு அருகே பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலால், பல கட்டடங்கள் கொழுந்துவிட்டு எரிவதால், அப்பகுதியின் வான் பரப்பில் மிகப்பெரிய புகைமூட்டம் காணப்பட்டது.
மூன்று கட்டங்கள் மற்றும் ஏராளமான கார்கள் வெடிகுண்டு தாக்குதலில் நாசமானதாக ரோஸ்டோவ் மாகாண ஆளுநர் வாஸிலி கொலுபேவ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் காரணமாக, பல முக்கிய சாலைகளில் இருக்கும் குடியிருப்புகளில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடனடியாக உணவுகள் வழங்கப்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம், விமான விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் மற்றும் வீரர் யெவ்ஜெனி பிரிகோஜின் ஆகியோர் புதின் ஆட்சிக்கு எதிராக தனது சதி முயற்சியை இந்த இடத்தில் இருந்துதான் தொடங்கினர், பின்னர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.